`தேர்தல் சமயத்தில் கோயிலுக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது’ - மதுரை ஆட்சியர் கருத்து ! | madurai collector says opinion about election issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (16/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (16/03/2019)

`தேர்தல் சமயத்தில் கோயிலுக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது’ - மதுரை ஆட்சியர் கருத்து !

கல்யாணத்துக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது அதுபோல தேர்தல் சமயத்தில் கோயிலுக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது என சித்திரை திருவிழா சமயத்தில் தேர்தல் வருவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர்

பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என மதுரையில் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் மனுவும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக, பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார், ``சித்திரைத் திருவிழா நடைபெறும் 33 இடங்களில் 122 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதற்குத் தகுந்தாற்போல் கூடுதலாகப் பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்படும். 

திருவிழா சமயத்தில் தேர்தல் வருகிறது. எனவே, மக்கள் விழிப்புணர்வாக வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு அதிகமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு அளிப்பதில் அடிப்படையாக இருக்கும். மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் கையகப்படுத்த பட்ட பணம் அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டாயமாக வெளிப்படுத்துவோம். கல்யாணத்துக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது. அது போல தேர்தல் சமயத்தில் கோயிலுக்கு வருபவர்களைத் தடுக்க முடியாது. தேர்தல் சமயத்தில் கோயிலுக்குச் செல்லும் நபர்களுக்கு இடையூறாக அமையாததைப் போன்ற நடவடிக்கைகள் எடுப்போம். அதே சமயம் பாதுகாப்பிலும் முனைப்போடு இருப்போம்’’ எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close