மசினகுடி ஆற்றில் இறந்த நிலையில் சிறுத்தை - பிரேதப் பரிசாேதனை செய்து எரித்த வனத்துறை! | cheetah died in masinagudi

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (16/03/2019)

கடைசி தொடர்பு:07:40 (16/03/2019)

மசினகுடி ஆற்றில் இறந்த நிலையில் சிறுத்தை - பிரேதப் பரிசாேதனை செய்து எரித்த வனத்துறை!

நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்தையொட்டிய மசினகுடி, அவரல்லா கெஜிகடவு பகுதியில் உள்ள ஆற்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தையை பிரேதப் பரிசாேதனை செய்து வனத்துறையினர் எரித்தனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பக வெளிமண்டலம், மசினகுடி வனச்சரகத்துக்குட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் வழக்கம் போல் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரல்லாவனத்தில் கெஜிகடவு, செம்மநத்தம் ஆற்றில் சிறுத்தை ஒன்று  இறந்து கிடந்ததைக் கண்டு உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். இறந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், இறந்து சில தினங்கள் ஆகியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அதே பகுதியில் சிறுத்தையின் உடலை வனத்துறையினர் எரித்தனர். பிரேதப் பரிசோதனை முடிவு வெளியான பின்பே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close