பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - அரசுக்கு `குட்டு' வைத்த நீதிமன்றம்..! | 25 lakhs compensation for affected woman due to released details of her

வெளியிடப்பட்ட நேரம்: 22:54 (15/03/2019)

கடைசி தொடர்பு:06:50 (16/03/2019)

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - அரசுக்கு `குட்டு' வைத்த நீதிமன்றம்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவலில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

ஐ.ஜி ஸ்ரீதர் மேற்பார்வையில் எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று தங்களது விசாரணையைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பல தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் வழக்கு விசாரணைக்குத் தொடக்க நிலையிலேயே 4 பேர் மட்டுமே குற்றவாளிகள், 4 வீடியோ தான் வெளிவந்துள்ளது என்று தகவல் அளித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close