`வாழ்வாதாரம் போச்சு; தேர்தலைப் புறக்கணிக்கிறோம்!' - மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வேதனை | 'Livelihood is ruined; We are watching the election! '- the cow workers

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:08:20 (16/03/2019)

`வாழ்வாதாரம் போச்சு; தேர்தலைப் புறக்கணிக்கிறோம்!' - மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வேதனை

``எங்களது வாழ்வாதாரங்கள் அழிந்துகொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துவிட்டோம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். இனியும் பொறுக்கமாட்டோம் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறோம்" என்று ஆலோசனைக்கூட்டத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

மணல் குவாரி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் தனவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாட்டுவண்டி
 

கூட்டத்தில் கலந்துகொண்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம், ``நாங்கள் அன்றாடம் பிழைப்புக்காக காலம்காலமாக மாட்டுவண்டிகள் மூலமாகச் சிறிய அளவிலான மணலை அள்ளிவருகிறோம். இதை நம்பி 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அரசின் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, போலீஸார் மாட்டுவண்டிகளைப் பறிமுதல்செய்து வழக்குப் பதிவு செய்துவருகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் பலர், இரவு நேரங்களில் லாரியில் மணல் கடத்துகிறார்கள். ஆற்றின் நடுவில் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஆனால், எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறார்கள். மாட்டுவண்டியில் மணல் எடுக்க மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்” என முடித்துக்கொண்டனர்..
 

போராட்டம் மாவட்டச் செயலாளர் மதியழகன் பேசுகையில். ``தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கென மணல் குவாரி அமைத்துத் தர அரசு தாமதப்படுத்துகிறது. மற்ற மாவட்டங்களில் மாட்டுவண்டிகள் குவாரி அமைத்துச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இம்மாவட்டத்தில் குவாரி அமைக்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே போல் இரவு நேரங்களில் லாரிகளுக்கு மணல் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, மாட்டு வண்டிக்கான குவாரியை அமைக்க வேண்டும்.

 

கூட்டம்

இல்லாவிட்டால் வரும் 25 -ம் தேதி மணல் மாட்டு வண்டி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் குடியுரிமை ஆவணங்களை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். அதிகாரிகள் மேலும் நடவடிக்கை இல்லை என்றால் வரும் வரும் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கிறோம்” என முடித்துக்கொண்டார்.
கூட்டத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்


[X] Close

[X] Close