நீலகிரி காேடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சிறப்பு மலை ரயில் - தென்னக ரயில்வே | summer fest in nilgiris special mountain trains

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (16/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (16/03/2019)

நீலகிரி காேடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சிறப்பு மலை ரயில் - தென்னக ரயில்வே

மலை ரயில்

நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நூற்றாண்டுகளை கடந்து இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். கோடை விடுமுறையின் போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும். மலை ரயிலில் பயணிக்க ஆன்லைன் மூலம் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்து விடுகின்றனர். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். கோடை சீசன் சமயங்களில் கூடுதல் பெட்டிகளைப் பொருத்தி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, சுற்றுலா ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் தென்னக  ரயில்வே அடுத்த மாதம் 6 -ம் தேதி முதல் ஜூன் மாதம் 30 -ம் தேதி வரை வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் சிறப்பு ரயில் இயக்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி முதல் ஜூன் மாதம் 29ம் தேதி வரையுள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 13 சனிக்கிழமையில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல் மாதம் 7 -ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை 13 ஞாயிற்றுக் கிழமையிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 


[X] Close

[X] Close