நட்பைக் கொச்சைப்படுத்தி ராக்கிங்! - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள்; மதுரையில் அதிர்ச்சி | Madurai student accused ragging

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/03/2019)

கடைசி தொடர்பு:13:10 (16/03/2019)

நட்பைக் கொச்சைப்படுத்தி ராக்கிங்! - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள்; மதுரையில் அதிர்ச்சி

ராக்கிங் கொடுமையால் இரண்டு மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத்

மதுரையில் தனியார் கல்லூரிகளில் ராக்கிங் பிரச்னை தொடர்ச்சியாக நிலவிவருகிறது. சில மாதங்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக மாணவர்கள் புகார் அளித்து பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதையடுத்து பல மாணவர்கள் கல்லூரியிலிருந்தும், விடுதியிலிருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுத்தனர்.

இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராக்கிங் பிரச்னைகள் தொடர்பாக புகார் வந்தது. இதனிடையே, அக்கல்லூரியில் முத்துப் பாண்டி மற்றும் பரத் ஆகியோர் பொருளியல் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது நட்பைப் பிடிக்காத திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவன் ஜெயசக்தி மற்றும்  சக மாணவர்கள் இருவரையும் கேலி, கிண்டல் செய்வது என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து ராக்கிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனம் உடைந்த முத்துப்பாண்டி மற்றும் பரத்தும் கடந்த 2-ம் தேதி இரவு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட முத்துப் பாண்டி

உடனே இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரத் சிகிச்சை பலனில்லாமல் கடந்த 4 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில். முத்துப்பாண்டி இன்று உயிரிழந்தார். ராக்கிங் கொடுமையால் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராக்கிங் செய்ததாக அந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஜெய்சக்தி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close