கனிமொழிக்கு எதிராக துரைதயாநிதி - அழகிரியின் திட்டம் என்ன? | M.K.Alagiri plans on lok sabha Elections 2019

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (16/03/2019)

கடைசி தொடர்பு:15:55 (18/03/2019)

கனிமொழிக்கு எதிராக துரைதயாநிதி - அழகிரியின் திட்டம் என்ன?

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தன் மகன் துரைதயாநிதியை களம் இறக்க மு.க.அழகிரி ஆலோசித்து வருகிறார்.

அழகிரி

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகள் என முடிவு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது தி.மு.க. அதன்படி கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அந்த வகையில் நாளை தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. அ.தி.மு.க தரப்பில் இன்றோ, நாளையோ, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழியை இந்த முறை மக்களவை உறுப்பினராக்க தூத்துக்குடியில் களமிறக்குகிறது தி.மு.க. இதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது.

துரைதயாநிதி

 

நாளைய பட்டியலில் அவர் பெயர் இடம்பெறுவது உறுதி. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தன் மகன் துரைதயாநிதியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் மு.க அழகிரி. இது தொடர்பாக சென்னையில் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுயேச்சையில் போட்டியிடும் அவரை பொதுவேட்பாளராக அறிவிக்க முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அழகிரி ஆலோசித்து வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close