தேர்தல் விழிப்புணர்வுக்காக வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் - தஞ்சை ஆட்சியரின் வித்தியாசமான அணுகுமுறை | 100 present vote election campaign at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:15:56 (18/03/2019)

தேர்தல் விழிப்புணர்வுக்காக வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் - தஞ்சை ஆட்சியரின் வித்தியாசமான அணுகுமுறை

தஞ்சாவூரில் நூறு சதவிகித வாக்குகள் பதிவாகிற வகையிலும், வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு குறைந்த வாக்குச் சாவடிகளில் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு வசிக்கும் வாக்காளர்களுக்கு வீடுதோறும் அழைப்பிதழ் கொடுத்து வாக்களிக்க அழைக்கவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தேர்தல் அழைப்பிதழ்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் யாரும் விதிமுறைகளை மீறாதவாறு கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தேர்தலில் நூறு சதவிகித வாக்கு பதிவாக வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளனர் அதிகாரிகள்.

இது குறித்து அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தோம், நூறு சதவிகிதம் நேர்மையாகவும்,உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டும், கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்த பகுதிகளில் நூறு சதவிகிதம் வாக்குப் பதிவை அதிகரிக்கும் வகையில்  பல திட்டங்கள் வகுக்கப்பட்டு கலெக்டர் அண்ணாத்துரை தலைமையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறோம்.இதற்காக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மூதாட்டி ஒருவர் நான் எனது வாக்கிற்குப் பணம் வாங்க மாட்டேன் உண்மையாக என் வாக்கை அளிப்பேன் என எழுதி கையொப்பமிட்டார். இது எங்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மக்கள் கூடும் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம்  நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

இதைத் தொடர்ந்து மகளிர் கல்லூரியில் இதையே வலியுறுத்தி கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதனையடுத்து கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்த பகுதிகளை கணக்கிட்டுள்ளோம் அந்தப் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு சென்று கொடுக்க இருக்கிறோம். ஒரு வீட்டு விஷேசத்திற்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தோம் என்றால் நிச்சயம் தவறாமல் அந்த நிகழ்ச்சிக்கு வருவதை அனைவரும் கடைபிடித்து வருகிறோம்.அதேபோல் வாக்களிக்கவும் அழைப்பிதழ் கொடுத்து அன்போடு அழைத்தால் நிச்சயம் மக்கள் வாக்களிக்க வருவார்கள். இதன் மூலம் நூறு சதவிகித வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close