வாக்காளர் என்ற முறையில் அழகிரியை சந்திப்பேன் - சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி | madurai cpm Candidate venkatesan wants to meet azhagiri

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (16/03/2019)

கடைசி தொடர்பு:15:58 (18/03/2019)

வாக்காளர் என்ற முறையில் அழகிரியை சந்திப்பேன் - சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி

'மதுரை தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில், மு.க.அழகிரியை சந்திப்பேன்' என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

சு.வெங்கடேசன்

 

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே, கொங்கு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், பாராளுமன்றத் தேர்தல் களம் காண உள்ளன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இன்று, மதுரையில்  அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், " மதுரையில் இன்று முதல் பிரசாரத்தைத் தொடங்குகின்றோம். மதுரை மக்களின் தேவைகளையும் அவர்களின் அடிப்படை வசதிகளையும் அறிந்துள்ளேன். மதுரை மாநகர் பண்பாட்டு தலைநகரம், கலாசார நகரம். தொழிற்வளர்ச்சி,வேலைவாய்ப்பை, கல்விசேவை உள்ளிட்ட முக்கியத் தேவைக்கான குழு அறிக்கையைத் தயார் செய்துள்ளேன். இதை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேட்பேன். மதுரைத் தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மதுரையில், 15 லட்சம்  வாக்காளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், தோழமைக் கட்சிகளையும் சந்திப்பேன் என்றும் கூறினார்.


[X] Close

[X] Close