அ.தி.மு.கவில் முதன்முறையாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதி - வேட்பாளர் யார்? | aiadmk allotted dindigul constituency to pmk

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (17/03/2019)

கடைசி தொடர்பு:11:40 (17/03/2019)

அ.தி.மு.கவில் முதன்முறையாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதி - வேட்பாளர் யார்?

அ.தி.மு.க வரலாற்றில் திண்டுக்கல் முக்கியமான தொகுதி. அக்கட்சி தொடங்கிய காலக்கட்டதில், முதல் தேர்தலை சந்தித்த தொகுதி.  இந்த தொகுதியை ராசியான தொகுதியாக அ.தி.மு.க தலைமை நினைத்தது. எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் அ.தி.மு.கவே களமிறங்கும். முதன்முறையாக இந்த பாரம்பரியத்தை உடைத்து கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிளார்கள்.

கூட்டணி

திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இருதரப்புக்கும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது.  நத்தம் விஸ்வநாதன் மருமகன் கண்ணனை வேட்பாளராக நிற்குமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது.  'சீனிவாசனின் ஆதரவாளரான மருதராஜ் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.  வெற்றி பெறுவது கடினம். எனவே மாவட்ட செயலாளர் பதவியை எனக்கு கொடுத்தால் எனது மருமகனை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கிறேன்' என விஸ்வநாதன் சொன்னதாக சொல்கிறார்கள். இதனால் நேற்று இரவு முழுவதும் மாவட்ட செயலாளர் மாற்றுவது தொடர்பான பஞ்சாயத்து நடந்திருக்கிறது.  மாவட்ட செயலாளரை மாற்ற அமைச்சர் சீனிவாசன் ஒப்புக்கொள்ளவில்லை.  உட்கட்சிப் பூசல் இருக்கும்போது, அ.தி.மு.க சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி அடைய நேரிடும் என நினைத்தது தலைமை. அதனால் பா.ம.கவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறது. பா.ம.க சார்பாக பழனி சத்திரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருக்கிறார். இவர் பா.ம.கவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.  விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கும் நிலையில் அ.தி.மு.க கூட்டணியும் அதே சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close