அ.தி.மு.க டூ அ.ம.மு.க - சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.செல்வம் யார்? | I will submit the fruit of the election to the symbolism. S.K.Selvam confirmed.

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (17/03/2019)

கடைசி தொடர்பு:16:06 (18/03/2019)

அ.தி.மு.க டூ அ.ம.மு.க - சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.செல்வம் யார்?

சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ்.கே.செல்வம். அவரை இன்று சேலம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நியமித்து இருக்கிறார். இதனால் அ.ம.மு.கவினர் மத்தியில் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

வெற்றி

 

 எஸ்.கே.செல்வம், இவர் 1988-ல் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.  1996 முதல் 2001 வரை வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக இருந்தவர்.  2001 முதல் 2006 வரையிலும்,  2011முதல் 2016 வரையிலும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.கவில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவானதில் இருந்து சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இதுபற்றி எஸ்.கே.செல்வத்திடம் கேட்டதற்கு, ''என் மீது துணை பொதுச் செயலாளர் நம்பிக்கை வைத்து சேலம் மக்களவையின் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அம்மாவின் உண்மையான விசுவாசிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்குப் பலத்த ஆதரவு இருப்பதால் நிச்சயம் வெற்றி பெற்று அந்த வெற்றி கனியை துணைத்தலைவர் சின்னம்மாவிற்கும், துணைத் தலைவர் தினகரனுக்கும் சமர்ப்பிப்பேன்'' என்றார். 


[X] Close

[X] Close