`நான் கடந்த முறை சொன்னதுபோலத்தான் இருக்கும்!’ - தி.மு.க வெற்றி வாய்ப்பு குறித்து அழகிரி | Mk azhagiri talks about lok shaba election

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (17/03/2019)

கடைசி தொடர்பு:16:13 (18/03/2019)

`நான் கடந்த முறை சொன்னதுபோலத்தான் இருக்கும்!’ - தி.மு.க வெற்றி வாய்ப்பு குறித்து அழகிரி

"திமுகவின் வெற்றி வாய்ப்பு, கடந்த முறை நான் சொன்னதுபோலத்தான் இருக்கும்" என்று மு.க.அழகிரி கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரி

நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், தி.மு.கவிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளார். கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக போட்டியிட்டவர்களுக்கு ஆதரவு அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கலைஞர் மறைவுக்குப்பின் தன் ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் மிகப்பெரிய அமைதி ஊர்வலத்தை நடத்தி கவனம் பெற்றவர், விரைவில் தன் அரசியல் நிலைபாட்டை அறிவிப்பேன் என்றார். ஆனால், அதற்குப்பின் எந்த சத்தமும் இல்லை. தி.மு.க தலைமையும் இவரை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தவரைச் சந்திக்க காத்திருந்தோம். ஆனால் அவர்கள் செய்தியாளர்களை கடந்து சென்றார். விடாமல் தொடர்ந்து அவரிடம், "நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய ஆதரவு யாருக்கு...?'' என்று கேட்டதற்கு, "தேர்தலில்  ஆதரவு யாருக்கு என்பது பற்றி  ஒரு வாரத்தில் முடிவு செய்து உங்களை அழைத்து கூறுவேன்." என்றார்.

"மதுரை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆதரவு கேட்டு தங்களை சந்திக்க வருவதாக கூறியுள்ளாரே..." என்றதற்கு, "வந்தால் வரவேற்போம். வெங்கடேசன் என்னை சந்திப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, சந்திக்க வந்தால் மரியாதை கொடுப்பேன்." என்றவர்.''திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்' என்றதற்கு 'கடந்த முறை நான் சொன்னதுபோல்தான் இபோது நடக்கும்' எனக்கூறிச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close