வேட்பாளரே இன்னும் அறிவிக்கவில்லை - அதற்குள் பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க! | bjp atrocities in kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (18/03/2019)

வேட்பாளரே இன்னும் அறிவிக்கவில்லை - அதற்குள் பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க!

பா.ஜ.க. தலைமை வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் படலத்தில் கட்சி நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

பா ஜ க வாக்குச் சேகரிப்பு

 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சேகரிப்பு

கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், ராமநாதபுரத்தில் கருப்பு முருகானந்தம், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் பா.ஜ.க. தலைமை வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபிறகுதான் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும்.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவதாகக் கூறி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டனர். நாகர்கோவிலில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், முன்னாள் நகராட்சித் தலைவி மீனாதேவ் ஆகியோர் தலைமையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகக் கொடுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.