கெளதம சிகாமணியுடன் மோதும் எல்.கே.சுதீஷ் - வெளியானது தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல்! | Dmdk loksabha candidate list announced

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:25 (18/03/2019)

கெளதம சிகாமணியுடன் மோதும் எல்.கே.சுதீஷ் - வெளியானது தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல்!

தே.மு.தி.க-வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் பிரேமலதா போட்டியிடவில்லை. 

தேமுதிக

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது அ.தி.மு.க. இந்த நிலையில் தங்கள் கட்சி சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற வேட்பாளர் பட்டியலை பா.ம.க நேற்று வெளியிட்டது. அதேபோல தே.மு.தி.க சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் எல்.கே.சுதீஷ், தி.மு.க வேட்பாளர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியுடன் மோதுகிறார். அ.தி.மு.க-வில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்..

 கள்ளக்குறிச்சி -  எல்.கே.சுதீஷ்

சுதீஷ்

 

திருச்சி -   இளங்கோவன்

இளங்கோவன்

விருதுநகர் - அழகர்சாமி

அழகர் சாமி

வடசென்னை  - அழகாபுரம் மோகன்ராஜ்

அழகாபுரம் மோகன்ராஜ்