தஞ்சையில் இன்று தொடங்குகிறது நாடகக் கலைவிழா - 23-ம் தேதி நிறைவு! | Stage Drama Festival Held at Tanjavore Starts Today

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:40 (18/03/2019)

தஞ்சையில் இன்று தொடங்குகிறது நாடகக் கலைவிழா - 23-ம் தேதி நிறைவு!

சினிமாவில் இன்று திறமையுள்ள நடிகர்களாக அறியப்படும் நடிகர்கள் பலரும் நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்குச் சென்றவர்கள். நவீன நாடகங்கள் நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களை நடிகர்களுக்கு பயிற்றுவிக்கிறது. தமிழின் தொன்மத்தை, சமூகத்தில் நிகழும் அநீதிகளை நாடகம் என்னும் கலை வடிவத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.  

நாடகம்

பல்வேறு நாடக அமைப்புகள் தொடர்ச்சியாக நாடகங்களை நிகழ்த்தி வருகின்றனர். நாடகத்துறைக்கென தமிழகத்தில் பல்வேறு நாடகக் கலைஞர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர்.

நாடகம்

தமிழகத்தில், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே நாடகத்துக்குகென ஒரு துறை உள்ளது. நாடகத்துறையின் மரபையும், அதன் நவீன வடிவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நாடகக் கலைவிழா நடைபெறுகிறது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையும் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து இந்த நவீன நாடகக் கலைவிழாவை நடத்துகிறது.   இன்று (18.3.2019) தொடங்கி  இம்மாதம் 23-ம் தேதிவரை 14 நாடகங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலுள்ள கரிகாற் சோழன் கலையரங்கத்தில் விழா நடைபெறுகிறது. இந்த நாடகத் திருவிழாவில் தமிழகத்தின் பல முக்கிய நாடகக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.