டைனோசர் காலத்து `ஜிங்கோ பயலபா' மரம்... மறுவாழ்வு அளிக்குமா தோட்டக்கலைத்துறை? | dinosaur age ginkgo biloba trees are now facing existing threats

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (18/03/2019)

கடைசி தொடர்பு:15:58 (18/03/2019)

டைனோசர் காலத்து `ஜிங்கோ பயலபா' மரம்... மறுவாழ்வு அளிக்குமா தோட்டக்கலைத்துறை?

`ஜிங்கோ பயலபா’ மரங்கள் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், மனிதர்களுக்கு நீண்ட ஆயுளை தரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.

டைனோசர் காலத்து `ஜிங்கோ பயலபா' மரம்... மறுவாழ்வு அளிக்குமா தோட்டக்கலைத்துறை?

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1847-ம் ஆண்டு கடல்மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் ஆங்கிலேயர்களால் 22 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் பல்வேறு மரக்கன்றுகள் காெண்டு வரப்பட்டு, அவற்றை தாவரவியல் பூங்காவில் நடவுசெய்தனர். இந்தப் பூங்காவில் தற்பாேது உலக நாடுகளைச் சேர்ந்த பல அரிய வகை மரங்கள் உள்ளன. தற்பாேது தாேட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் இந்தப் பூங்காவில் உள்ள தாவரங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றைக் காண தமிழகம் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலிருந்தும்  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.  

ஊட்டி தாவரவியல் பூங்கா

இப்பூங்காவில் வரலாற்றுப் பின்னணி காெண்ட, அரிதிலும் அரிதான டைனோசர் காலத்து மரம் என்றழைக்கப்படும் `ஜிங்காே பயலபா’ எனும் 270 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் நடந்த தாெல்லியல் ஆய்வின்பாேது, நிலத்துக்கடியில் படிமமாக இந்த வகை மரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வுக்குட்படுத்தியபோது 270 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரங்கள் இவை எனக் கண்டறியப்பட்டது. இது ஜிங்காே பேரினக் குடும்பத்தைச் சேர்ந்த ’ஜிங்காே பயலபா’ என்பது தெரியவந்தது. திசு வளர்ப்பு முறையில் இந்த வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து சீனாவில் நடவு செய்து மீட்டுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் `ஜிங்கோ பயலபா’ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்பாேது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரு நாற்றுகளும், ஊட்டி மரவியல் பூங்காவில் ஒரு நாற்றும் நடவுசெய்யப்பட்டுள்ளது.

 ஜிங்கோ பயலபா மரம்

இவை முறையான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. மரவியல் பூங்காவில் உள்ள ஒரே‛ ஜிங்காே பயலபா’ மரமும் பாதுகாப்பில்லாமல், ஆணிகள் அடிக்கப்பட்டுக் காணப்படுவது சுற்றுச்சூழலியல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிகச் சாெற்ப அளவில் உள்ள இந்த வகை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அப்போதிருந்த தாேட்டக்கலைத்துறை அதிகாரிகள், சீனா மற்றும் இங்கிலாந்திலிருந்து இந்தவகை மரக்கன்றுகளை வரவழைத்து ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் நடவு செய்தனர். தற்போது மீண்டும் பராமரிப்பின்றி மோசமாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற முன்னாள் தாேட்டக்கலைத்துறைமுன்னாள் தாேட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ராம்சுந்தர் இணை இயக்குநர் ராம்சுந்தர் கூறுகையில், ``ஜிங்காே பயலபா’ வகை  மரங்கள் டைனோசர் காலத்தைச் சேர்ந்த மரங்கள். இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளன. சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆங்கிலேயர்கள் நிர்வகித்தபாேது, ஜிங்கோ பயலபா நாற்று ஒன்றை வரவழைத்து நடவு செய்தனர். பிறகு தாேட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா செயல்படத் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் முயற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 5 ஜிங்காே பயலபா நாற்றுகளை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரவழைத்துக் காெடுத்தார். மிகவும் மெதுவாக வளரக்கூடிய இந்தவகை மரம், சுமார் 3000 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. காஷ்மீர் அல்லது இமாலயப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் சுமார் 5 மரங்கள் மட்டுமே இந்தவகை மரங்கள் இருக்கக்கூடும். இங்கிலாந்தில் உள்ள ராயல் கிங் தாவரவியல் பூங்காவில் இந்த வகை மரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. திசு வளர்ப்பு மூலம் `ஜிங்கோ பயலபா’ மரக்கன்றுகளை உற்பத்திசெய்ய அதிகம் செலவாகும். ஆனால், துணுக்குகள் மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது எளிதானது. எனவே, மரத்தின் துணுக்குகள் காெண்டு அதிகளவு நாற்றுகளை உற்பத்தி செய்து பாெதுஇடங்களிலும், பிற பூங்காக்களிலும் நடவு செய்து பராமரிக்க வேண்டும். `ஜிங்கோ பயலபா’ மரங்கள் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், மனிதர்களுக்கு நீண்ட ஆயுளை தரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. புவியில் உள்ள மிக பழைமையான மரங்களுள் `ஜிங்காே பயலபா ’ வகை மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாவரங்கள் குறித்து ஆய்வு செய்பவர்களும் இவ்வகை மரங்களைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,’’என்றார்.


டிரெண்டிங் @ விகடன்