எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது? - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம் | `critical years of an immortal legend' book will release about MGR

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (19/03/2019)

எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது? - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்

 எம். ஜி. ஆர்

றைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பற்றிய'.".critical years of immortal legend' புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு" என்ற புத்தகத்தை அவருடைய அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தமிழ் , ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் எழுதியுள்ளார். 

எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவருடைய மனநிலை குறித்து இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. வரும் 28 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்வில் ஆங்கிலப் புத்தகத்தை பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளியிடுகிறார். அதேபோன்று தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிடுகிறார். இது குறித்துப் பேசிய ஹெண்டே, ``1984 ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை இதில் தெளிவாக எழுதியுள்ளேன். குறிப்பாக அப்போலோ மருத்துவமனையில் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமாக இருந்த அந்த நிமிடங்கள். வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட  அந்தச் சூழல்களையும் அப்படியே பதிவு செய்துள்ளேன். அதைத் தொடர்ந்து அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவரை விமானத்தில் அழைத்துச் சென்ற போது எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அந்த விமானத்தை Intensive care ஆக மாற்றினோம். அந்த  நிகழ்வுகளையும் அத்தியாயம் அத்தியாமாக தெளிவாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்" என்றார். 

இதைத் தொடர்ந்து ``இந்தப் புத்தகத்தில் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த அதிருப்தி குறித்து எழுதியிருக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு பதிலளித்தவர். ``இந்தப் புத்தகத்தில் ஜெயலலிதாவைப் பற்றி நல்ல முறையில் எழுதியிருக்கிறேன் யாரையும் தவறாக எழுதவில்லை. நான் அவரிடம் ஈகோ பார்ப்பேன். அதை என்னிடமே சிரித்துக்கொண்டு  பலமுறை கூறுவார். அதற்காக அவருடன் நல்ல உறவு முறை இல்லை என்று கூறிவிட முடியாது. இந்தப் புத்தகம் முழுவதுமாக எம்.ஜி,.ஆர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கிறது" என்றார்.