"உன்னைவிட இன்னொருத்தி அழகா வந்தா போவேன்" - பொள்ளாச்சியில் மற்றொரு பகீர் சம்பவம்! | Pollachi bus conductor cheats women by love

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (18/03/2019)

கடைசி தொடர்பு:22:05 (18/03/2019)

"உன்னைவிட இன்னொருத்தி அழகா வந்தா போவேன்" - பொள்ளாச்சியில் மற்றொரு பகீர் சம்பவம்!

பொள்ளாச்சி பாலியல்

பொள்ளாச்சிக்கு ஏதோ கெட்ட நேரம் போல!  கல்லூரிப் பெண்களைக் கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்த கும்பல்குறித்த வழக்கு முடிவடைவதற்குள் இன்னொரு பாலியல் புகார்குறித்து வெளிவரும் ஆடியோக்கள் பொள்ளாச்சி மக்களை அதிரவைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,  பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பொள்ளாச்சியை அடுத்த நாதே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் மீது ஒரு பகீர் புகார் கொடுத்தார். அதில், "பிரைவேட் பஸ்ஸில் கண்டக்டராக வேலைசெய்யும் பாலச்சந்திரன்  தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லி இரண்டு முறை கர்ப்பமாக்கி அதை வலுக்கட்டாயமாகக் கலைக்கவும் வைத்துவிட்டான். எப்படியும் திருமணம் செய்துகொள்வான் என்று நினைத்த எனக்கு நாள்கள் போகப்போகத்தான் அவனது சுயரூபம் தெரிந்தது. என்னைப்போல, அவன் வேலைபார்க்கும் பஸ்ஸில் சென்ற பல பெண்களை இப்படிச் செய்துள்ளான். அவனோடு பழகும்போது காதலிப்பதாக நம்பி அனுப்பிய அந்தரங்க மெசேஜ்கள் மற்றும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறான் என்று கூறி அதிரவைத்திருந்தார்.

ஏற்கெனவே ஒரு பாலியல் வழக்கு பொள்ளாச்சியில் புயலைக் கிளப்பிக்கொண்டிருந்த சூழலில், இதைப்  பொருட்படுத்தாத போலீஸார் அந்தப் பெண்ணிடம் புகார் வாங்காமல் நீண்ட நேரம் காக்கவைத்தனர். அதுகுறித்து, ஊடகங்களில் செய்தி வெளியானதும், உடனடியாகப் புகாரைப் பெற்று,  அன்று இரவே பாலச்சந்திரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்கள், பாலச்சந்திரன் அந்தப் பெண்ணிடம் பேசிய ஆடியோக்களையும் புகார் கொடுத்த பெண் பாலச்சந்திரனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகியுள்ளது.  அதைக்  கேட்டால் நெஞ்சம் பதறுகிறது... 'என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீயே...' என்று அந்தப் பெண் கதறும்போது, கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் ''உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ… நான் இப்படித்தான்! உன்னைவிட இன்னொருத்தி அழகா இருந்தா, அவகூட போவேன். அவளவிட இன்னொருத்தி அழகா வந்தா அவகூட போவேன். இதுதான் நான்!'' என்று அந்தப் பெண்ணின் சாதியைச் சொல்லி மிகவும் தரக்குறைவாக, வக்கிரமான வார்த்தைகளால் பேசுகிறார். பாலச்சந்திரனால் பாதிக்கப்பட்ட மற்ற சில பெண்கள், தாங்கள் பாலச்சந்திரனிடம் ஏமாந்த கதையை இந்தப் பெண்ணிடம் சொல்லிக்  குமுறும் ஆடியோக்களும் பதறவைக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க