எடப்பாடி, பன்னீரின் ஆசி பெற்ற தேனி மாவட்ட வேட்பாளர்கள்! - நாளை ஊர் திரும்புகிறார்கள் | Theni Lok sabha Candidate starts election propaganda from Tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:33 (19/03/2019)

எடப்பாடி, பன்னீரின் ஆசி பெற்ற தேனி மாவட்ட வேட்பாளர்கள்! - நாளை ஊர் திரும்புகிறார்கள்

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் களம் இறக்கப்பட்டிருக்கிறார். பெரியகுளம் (தனி) தொகுதிக்கு, கள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன், ஆண்டிபட்டி தொகுதிக்கு ஆ.லோகிராஜன் ஆகியோர் களம் காண்கிறார்கள். மூவரும் இன்று முதல்வர், துணைமுதல்வர் இருவரையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

ரவீந்திரநாத் குமார்

ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.மகாராஜன் இன்று (18.3.2019) மதியம் சென்னையிலிருந்து தேனி திரும்பினார். அதேபோல ஆண்டிபட்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், மகாராஜனின் உடன்பிறந்த தம்பியுமான ஆ.லோகிராஜன் சென்னையிலிருந்து தேனி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

லோகிராஜன்

இந்த நிலையில், லோகிராஜன் நாளை தேனி திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. லோகிராஜன், ரவீந்திரநாத்குமார் இருவரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் சந்தித்து ஆசி பெற்றனர். நாளை இருவரும் தேனி வருவதாகவும், அவர்களுக்காக ஆண்டிபட்டி கணவாயில் பிரமாண்ட வரவேற்பைத் தேனி மாவட்ட அ.தி.மு.க’வினர் நிகழ்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை முதல் இருவரும் தங்கள் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.