காரைக்குடி அ.ம.மு.க அலுவலகம் திறப்பு விழாவில் பிரியாணி - படம் பிடித்த செய்தியாளர்களைத் தாக்கிய மா.செ | Problem in sivagangai election ammk party office opening

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:35 (19/03/2019)

காரைக்குடி அ.ம.மு.க அலுவலகம் திறப்பு விழாவில் பிரியாணி - படம் பிடித்த செய்தியாளர்களைத் தாக்கிய மா.செ

சிவகங்கை அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்போகி பாண்டி திருப்புவனத்தில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி வரைக்கும் தனது பிரசாரத்தை முதன் முதலாக  நேற்று தொடங்கினார். திருப்புவனத்தில் தாரை தப்பட்டை முழங்க வெடிவெடித்து வேட்பாளருக்கு கட்சித் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

பிரியாணி பார்சல்

அப்போது காரைக்குடியில் அ.ம.மு.கவின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி வழங்கியதைப் படம்பிடித்த செய்தியாளர்களுக்கும், அ.ம.மு.க நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை அ.ம.மு.க சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவன் தரக்குறைவாக பேசியதோடு சேரை தூக்கி அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அதன்காரணமாக செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உமாதேவன் மீது செய்தியாளர்கள் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர். பிரசாரம் தொடங்கிய முதல் நாளே பத்திரிகையாளர்களோடு மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளார் அ.ம.மு.க வேட்பாளர்.

தொண்டர்கள்

ஏற்கெனவே அவர் மீது சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளோடு பிரச்னை செய்து அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், காரைக்குடியில் கூட்டுறவுத்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க