அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன? | admk election manifesto released

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:56 (19/03/2019)

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். 

அதிமுக

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை தி.மு.க சற்று முன்வெளியிட்டது. இதில், `நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. 

தேர்தல் அறிக்கை


அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

வறுமை ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்படும்.

நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வீணாக கலக்கப்படும் நீர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி கோதவாரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

வேளாண் கடன்களால் அவதியுறும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.

இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களுக்கு, பிற்படுத்தபட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறும் வகையில், சலுகைகள் பெற புதிய சட்டம் வகுக்க வலியுறுத்துவோம்.

ஈழத்தமிழருக்கு நீதி வழங்கும் வகையில் போர்குற்றச்செயல், இனப்படுகொலை குறித்து சர்வசதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது போல், 7 தமிழரை விடுவிக்க  குடியரசுத் தலைவரை வலியுறுத்துவோம்.

அலுவல் மொழியில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவிக்க வலியுறுத்துவோம்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

சமூக நீதி, பெண் விடுதலை, எளியோருக்கு சமூக பொருளாதார பாதுகாப்பில் அ.தி.மு.க  பயணிக்கும்.