தமிழக எம்.பி அன்புமணியின் பங்களிப்பு மோசம்! ஆய்வு சொல்லும் காரணம் என்ன?  | Anbumani Ramadoss worst performer in lok shaba

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:39 (19/03/2019)

தமிழக எம்.பி அன்புமணியின் பங்களிப்பு மோசம்! ஆய்வு சொல்லும் காரணம் என்ன? 

டந்த 16-வது மக்களவை எம்.பி-க்களின் செயல்பாடு குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பி.ஆர்.எஸ் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்களின் செயல்பாடு சராசரிக்கும் கீழ் என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. அட்டென்டன்ஸ் விஷயத்தில் அகில இந்திய எம்.பி- க்களின் சராசரி 80 சதவிகிதம் என்றால் தமிழகம், பாண்டிச்சேரி எம்.பி- க்களின் அட்டென்டன்ஸ் 78 சதவிகிதம்தான். சராசரிக்கும் 2 சதவிகிதம் குறைவு. பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸின் அட்டென்டன்ஸ்  45 சதவிகிதமே. கேள்விகள் எழுப்புவதிலும் விவாதங்களில் பங்கேற்பதிலும் அன்புமணியின் பங்களிப்பு மோசம் என்றும், நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றபோது தமிழகத்தில் அன்புமணி இருந்தார் எனவும் பி.ஆர்.எஸ் ஆய்வு கூறுகிறது. 

அன்புமணி

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2019 பிப்ரவரி 19-ம் தேதி வரை நாடாளுமன்ற விவாதங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், தேசிய அளவில் ஒரு எம்.பி 67 சதவிகிதம் விவாதங்களில் பங்கேற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் 47 சதவிகிதமே விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். என்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த பாண்டிச்சேரி எம்.பி வெறும் 9 விவாதங்களிலேயே பங்கேற்றுள்ளார். அன்புமணி மற்றும் விருதுநகர் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலா 12 விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். நெல்லை எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் 13 விவாதங்களில் கலந்துகொண்டுள்ளார். 

சத்யபாமா

அதேவேளையில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதில் தமிழக எம்.பி-க்கள் அசத்தியுள்ளனர். தேசிய அளவில் ஒரு எம்.பி 293 கேள்விகளை எழுப்பினால் தமிழக எம்.பி-க்கள் 453 கேள்விகள் எழுப்பியிருக்கின்றனர். விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், அதிகபட்சமாக 920 கேள்விகளை எழுப்பியுள்ளார். மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர். விஜயகுமார் 917 கேள்விகளைக் கேட்டுள்ளார். திருப்பூர் எம்.பி. சத்யபாமா, நாடாளுமன்றத்தில் 87 சதவிகித அட்டென்டன்ஸுடன் 16-வது மக்களவையை நிறைவு செய்துள்ளார்.  தமிழக எம்.பி-க்களில் இவருக்கு முதலிடம். 137 விவாதங்களில் பங்கேற்றுள்ள சத்யபாமா, 457 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க