``நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்" - மதுரையில் இலவசப் பயிற்சி முகாம் | Vikatan publication and Shankar IAS Academy conduct IAS coaching free seminar at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:32 (19/03/2019)

``நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்" - மதுரையில் இலவசப் பயிற்சி முகாம்

மாணவர்கள் மனதில் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவு நிறைந்திருக்கும். இந்தக் கனவை செயல் வடிவம் கொடுக்கும் வகையில், விகடன் பிரசுரம் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து, ``நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்" என்ற இலவசப் பயிற்சி முகாமை மதுரை மாநகரில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மார்ச் 23-ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம்.

 

நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்

``நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்" கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்டப்பணிகள் இயக்குநர் அம்ரித் பழனியப்பன் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் வைஷ்ணவி ஆகியோர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர். 

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. மதுரை - இராமேஸ்வரம் சாலையில் விரகனூரில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்! ஐ.ஏ.எஸ் ஆவதற்கான ஆலோசனையைப் பெறுக!