குறியீடு மூலம் கடும் விமர்சனம்!- அழகிரி மகன் துரை தயாநிதியின் சர்ச்சை ட்வீட்! | Dhayanidhi Alagiri tweets creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:12 (25/03/2019)

குறியீடு மூலம் கடும் விமர்சனம்!- அழகிரி மகன் துரை தயாநிதியின் சர்ச்சை ட்வீட்!

தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.

துரைதயாநிதி

நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என முடிவுசெய்ததுடன், தனது கட்சி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது தி.மு.க. அதன்படி, கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரசாரத்தைத்  தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள பிரபல கட்சியையும், அதன் தலைவரையும் விமர்சிக்கும் வகையில், அழகிரியின் மகன் துரை தயாநிதி ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில குறியீடுகளை வெளியிட்டு, அந்தக் கட்சியின் தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவு, தற்போது கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. 

ட்வீட்

முன்னதாக, தி.மு.க-விலிருந்து நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளார். கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில், தி.மு.க-வுக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவு அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கருணாநிதி மறைவுக்குப்பின் தன் ஆதரவாளர்களைத் திரட்டி, சென்னையில் மிகப்பெரிய அமைதி ஊர்வலத்தை நடத்திக் கவனம்பெற்றவர், பேட்டிகொடுத்தார். அப்போது, ''தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்' என்றதற்கு, 'கடந்த முறை நான் சொன்னதுபோல்தான் இப்போது நடக்கும்' என கூறிச் சென்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க