`அதிருப்தி இருக்கத்தான்செய்யும்; ராஜகண்ணப்பன் மீண்டும் வருவார்!'- ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar Believes Rajakannan to Come back with admk

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (25/03/2019)

`அதிருப்தி இருக்கத்தான்செய்யும்; ராஜகண்ணப்பன் மீண்டும் வருவார்!'- ஆர்.பி.உதயகுமார்

 ''தேர்தல் நேரங்களில், எதிர்பார்ப்பது கிடைக்கவில்லையென்றால் அதிருப்தியை வெளிப்படுத்துவது வழக்கமானதுதான். அந்த வகையில், விலகிச்சென்றுள்ள ராஜகண்ணப்பன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவார்'' என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

உதயகுமார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்,  இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். மதுரை மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், மூன்று  மாவட்டங்களாகப் பிரித்து, எனக்கு மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமில்லாது தேனி, விருதுநகர்  மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வியூகங்கள் அமைத்துள்ளோம்.

தேர்தல் நேரங்களில் எதிர்பார்ப்பது கிடைக்காதபோது, அதிருப்தியை வெளிப்படுத்துவது வழக்கமானதுதான். தேர்தல் பரபரப்பை தமக்கு சாதகமாக ராஜ கண்ணப்பன் பயன்படுத்திவருகிறார். அதே நேரம், மீண்டும் அ.தி.மு.க-வில் அவர் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அ.ம.மு.க வெற்றிபெறுவதற்காகப் போட்டியிடவில்லை. அ.தி.மு.க வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் போட்டியிடும் அவர்களை  மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க