``நான் வெற்றி பெற்றால்..!”– அசர வைக்கும் சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதிகள் | Lok sabha Elections -2019 - theni Independent candidate promise Pension to farmers

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (25/03/2019)

``நான் வெற்றி பெற்றால்..!”– அசர வைக்கும் சுயேச்சை வேட்பாளரின் வாக்குறுதிகள்

ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில், அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வழக்கறிஞர் குமரகுருபரன்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரகுருபரன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார் கலெக்டர் பல்லவி பல்தேவ். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய குமரகுருபரன், ``மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறேன்.

சுயேச்சை வேட்பாளர் குமரகுருபரன்

அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். நான் வெற்றி பெற்றால் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயம் செய்து ஓய்ந்து போகும் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்ஷன் கொடுப்பேன். தேனி மாவட்டத்தின் நீண்ட கால கோரிக்கையான சபரிமலை முதல் திண்டுக்கல் வரையிலான ரயில் பாதை கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்வேன். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப் பாடுபடுவேன். அரசு ஒயின் தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுப்பேன்” என்று அசரும் படி வாக்குறுதி அளித்தார்.