ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி! - சென்டிமென்ட் காட்டிய மு.க.ஸ்டாலின் | stalin meets rasathi ammal before release a dmk manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (19/03/2019)

கடைசி தொடர்பு:09:33 (21/03/2019)

ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி! - சென்டிமென்ட் காட்டிய மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார், தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதில் தொடங்கி, யார் யாருக்கு எந்தத் தொகுதி என்பதுவரை முடிவாகிவிட்டது. இரண்டு திராவிடக்கட்சிகள் தரப்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகின்றன. இரண்டு ஆளுமைகளும் இல்லாத நிலையில், திராவிடக்கட்சிகள் மோதும் முதல் தேர்தல் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையை இன்று அறிவித்தது. 

தயாளு அம்மாள்

அதில், ``கேஸ் தொகைக்கு வழங்கப்படும் மானியத் தொகை வங்கிகளில் செலுத்தப்படும் முறை மாற்றம், கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம், நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்துசெய்ய நடவடிக்கை, தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்க 10 -ம் வகுப்பு படித்த 1 கோடி பேருக்கு பணி" உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஸ்டாலின், கோபாலபுரம் இல்லம் சென்றுள்ளார். அங்கு, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலிசெலுத்தியவர், தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கிக்கொண்டார்.

ராசாத்தி அம்மாள்

பின்பு, தனது தாய் தயாளு அம்மாளைச் சந்தித்த ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை அவரிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை முடித்துக்கொண்டு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க