‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள் | MGR statue

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:16 (25/03/2019)

‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்

சிவகங்கையில், அ.தி.மு.க வேட்பாளருக்காக மூடப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை அ.தி.மு.க-வினர் திறந்தது அனைத்துக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை (தனி ) தொகுதி அ.தி.மு.க வேட்பாளர்  கீழநெட்டூர் நாகராஜன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்ததில் தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

சிவகங்கையில், தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் கட்சித் தலைவர்களின்  சிலையெல்லாம்  தேர்தல் அதிகாரிகள் துணியால் மறைத்திருக்கிறார்கள். அதில் எம்.ஜி.ஆர் சிலையையும்  துணியால் கட்டி மறைத்து வைத்திருந்தார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் கீழநெட்டூர் நாகராஜன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்பதற்காக, சிவகங்கை நகரச் செயலாளர் ஆனந்தன், எம்.பி செந்தில்நாதன், அமைச்சர் மகன் கருணாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மறைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து மாலை அணிவித்தனர். இதையெல்லாம் தேர்தல் அதிகாரிகள் கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Sivagangai mgr statute

நேற்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் பாண்டி, சிவகங்கையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட வந்தார். எம்.ஜி.ஆர் சிலை துணியால் போர்த்தப்பட்டிருந்ததால் மாலை அணிவிக்காமலேயே சென்றுவிட்டார். தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில், மறைத்துவைத்திருந்த எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மீதும் அதற்குத் துணையாக இருந்த தேர்தல் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க, அ.ம.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போர்க்கொடி தூக்கிவருகிறார்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க