‘பா.ஜ.க 360 தொகுதிகளைக் கைப்பற்றும்’- ஹெச்.ராஜா ஆருடம்! | BJP wins 360 seats in Lok sabha elections says h.raja

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:16 (25/03/2019)

‘பா.ஜ.க 360 தொகுதிகளைக் கைப்பற்றும்’- ஹெச்.ராஜா ஆருடம்!

ஹெச்.ராஜா


 
பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, குடும்பத்தினருடன் கும்பகோணத்தை  அடுத்த  சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து சிறப்பு யாகம் நடத்தினார். பின்னர், மூலவர் சந்நிதியில் முருகனை,  நீண்ட நேரம் வழிபட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "மத்திய பா.ஜ.க அரசு வலிமையுடன் இருக்கிறது. வரும்  நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அளவில் 360 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். தமிழக அளவில் 30 முதல் 35 தொகுதிகளை கைப்பற்றும். தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி, தேச பக்த சக்தி நலனில் அக்கறைகொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகளை  வைத்து வாக்காளர்களிடம் வாக்கு கேட்போம். அமெரிக்கா ராணுவத்தால் பின்லேடனை சுட்டுக் கொன்றபோது, அவரது உடலை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள தேச விரோதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியபோது அதை நம்பாமல், கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் காட்டுங்கள் எனப் பேசி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் முன்னேற்றம் குறித்தும், மோடி செய்துள்ள பல சாதனைத் திட்டங்கள் குறித்தும் வாக்கு சேகரிக்க உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி பொதுமக்களிடம் ஒட்டு கேட்போம். ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றார்.

பின்னர், சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே, மெலட்டூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கும் சென்று ஹெச்.ராஜா குடும்பத்தினருடன் வழிபட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க