`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்! | Judge Advised for Government Servants

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (20/03/2019)

கடைசி தொடர்பு:06:30 (20/03/2019)

`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்!

பாகிஸ்தானின் பால்கோட்டில் தீவிரவாதிகள் முகாமை அழித்த விமானப் படையினரைப் போல, அரசு ஊழியர்களும் தைரியமாக கடமையாற்ற வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

கோவை மாவட்டம், சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணியாற்றிய சீனிவாசன், வேலூர் கல்லாவி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், தனக்கு மூன்றரை வயதுக் குழந்தை இருப்பதால் குடும்ப நலனைச் சுட்டிக்காட்டி, பணி மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்வாக காரணங்களுக்காக சீனிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு கூறிய காரணத்தை ஏற்ற நீதிபதி, ``நிர்வாக காரணங்களுக்காகப் பணி மாற்றம் செய்யும் போது, நீதிமன்றம் தலையிட முடியாது" எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், ``எந்த ஊரிலும் பணியாற்ற வேண்டும் என்ற பணி நிபந்தனையை ஏற்றுப் பணியில் சேரும் போது, குழந்தை, வயதான பெற்றோர் எனக் காரணங்களைக் கூறிப் பணி மாறுதலை எதிர்ப்போர் அரசுப் பணியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். பாகிஸ்தானின் பால்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த விமானப் படையினரை போல, அரசு ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும்" என நீதிபதி அரசு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க