செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் | chennai is cheapest city in the world

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (20/03/2019)

கடைசி தொடர்பு:11:25 (20/03/2019)

செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம்

லகில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது. செலவு பிடிக்கும் நகரங்களில் முதலிடத்தைச் சிங்கப்பூர் பெற்றுள்ளது. 

சென்னை

Economist Intelligence Unit 2019-  உலகின் செலவு மிகுந்த மற்றும் குறைந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜூரிச் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகருடன் 5-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சியோல் நகருக்கு 6-வது இடம். டென்மார்க் தலைநகரம் கோபன்ஹெகன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 7-வது இடம். இஸ்ரேலின் டெல்அவிவ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் 10-வது இடத்தைப் பிடித்துள்ளன. 

சென்னை மெட்ரோ

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் உலகளவில் சென்னை நகரம் அர்ஜென்டினா தலைநகர் பியூன்ஸ் அயர்சுடன் சேர்ந்து 8-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. முதலிடத்தை வெனிசூலாவின் தலைநகர் கரகாஸ் பிடித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கன்ட், கஜகஸ்தானின் அல்மாதி அடுத்தடுத்த  இடங்களைப் பிடித்துள்ளன. பெங்களூரு நகருக்கு 5-வது இடம். கராச்சிக்கு 6-வது இடம். நைஜீரிவாயின் லாகோஸ் நருக்கு 7-வது இடம். டெல்லிக்கு 10-வது இடம்.

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட 150 காரணிகளைக் கொண்டு 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க