`பாலீஷ் அரிசியை உணவாக அளிப்பது சிட்டுக் குருவிகளுக்கு பெரும் கேடு!- சூழலியல் ஆர்வலர் எச்சரிக்கை #WorldSparrowDay | world sparrow day special article

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (20/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (20/03/2019)

`பாலீஷ் அரிசியை உணவாக அளிப்பது சிட்டுக் குருவிகளுக்கு பெரும் கேடு!- சூழலியல் ஆர்வலர் எச்சரிக்கை #WorldSparrowDay

ஆண்டுதாேறும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக் குருவிகள் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதமாக சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் காெண்டாடப்படுகிறது.

சிட்டுக் குருவி

கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20 சர்வதேச சிட்டுக்குருவி தினமாக நினைவு கூறப்படுகிறது. மனிதர்கள் வாழ்விடங்களில் வாழும் தகவமைப்பைக் கொண்ட பறவையினம், சிட்டுக்குருவிகள். குடியிருப்பு பகுதிகள், வயல் வெளிகள் என எங்கும் காணப்படும் சிட்டுக் குருவிகள் மீது பல ஆண்டுகளாக பல்வேறு கற்பிதங்கள் நிலவிவருகிறது. வேகமாக அழிந்துவரும் பறவை என தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், இதுகுறித்த ஆய்வு தரவுகள் ஏதும் முழுமையாக இல்லை என பறவையியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள்தான் சிட்டுக் குருவிகள் அழியக் காரணம் என்ற கருத்து உலாவி வருகிறது. ஆனால், இது குறித்த பறவையின ஆய்வாளர்கள் கூறுவது முற்றிலும் வேறாக உள்ளது. 

சிட்டுக் குருவிகள் குறித்து சூழலியல் ஆர்வலர் சிவதாஸ் கூறுகையில், ``உண்மையில் சிட்டுக்குருவிகள் குறித்து வெகு மக்களிடம் தவறான புரிதல்களே அதிகம் நம்பப்படுகிறது. மனித வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையைக் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு உயிரினங்களும் சவால்களை எதிர்கொள்கின்றன. அதேசூழலியல் ஆர்வலர் சிவதாஸ்போலதான் சிட்டுக் குருவிகளும். சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வு மிக வேகமாக மக்களிடம் சென்று சேர்ந்து வருவதை அறிகிறாேம். ஒரு வகையில் நல்லது என்றாலும், பல தீமைகளும் இதில் உள்ளது. சிட்டுக் குருவிகளை பாதுகாப்போம் எனும் பெயரில் பலரும் வீடுகளில் கூடுகளை அமைக்கின்றனர். அந்தக் கூடுகள் வைக்க இடம் தேர்வு செய்வது குறித்து கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றனர். தவறான இடங்களில் வைக்கப்படும் கூடுகளில் சிட்டுக் குருவிகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் சமயங்களில் பூனை, காக்கை உள்ளிட்டவை சேதப்படுத்தும்.

அதேபாேல கூரைகளில் கூடுகளைப் பொருத்துவதால் மழைக் காலங்களில் கூடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் துயரங்களும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது முக்கிய பிரச்னையாக இருப்பது சிட்டுக்குருவிகள் பாலீஷ் செய்த அரிசியை உணவாக அளிப்பது அவற்றுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டுமல்லாது தற்போது பறவை இனங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பது விளை நிலங்களில் நாம் பயன்படுத்தும் ரசாயன மருந்துகள் மற்றும் உரங்களே. பெரும்பாலும் தினை, ராகி பாேன்ற சிறு தானியங்களை விரும்பி உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் சமயங்களில் சிறு புழுக்கள் பூச்சிகளையே தேடிப் பிடித்து குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கும். விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால்,  அதை உண்ணும் சிட்டுக் குருவிகளுக்கு பாேதிய புரதச் சத்து கிடைக்காமல் முட்டைகளும் அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளும்  பலவீனமடைகின்றன. எனவே, சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும்,  சரியான புரிதலுடன் அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பாேம்’’என்றார்.