`இடுக்கி வைத்து அதிக அழுத்தம்; இரண்டாக வந்த குழந்தையின் உடல்!- பிரசவத்தின்போது நடந்த துயரம் | Child death while delivery in government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (20/03/2019)

`இடுக்கி வைத்து அதிக அழுத்தம்; இரண்டாக வந்த குழந்தையின் உடல்!- பிரசவத்தின்போது நடந்த துயரம்

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவத்தின்போது குழந்தையின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் பிரிந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தாயின் உடல் நிலையும் மோசமாக இருப்பதால் அந்தக் குடும்பத்தினர் வேதனையடைந்துள்ளனர்.

பிரசவத்தின் போது பிரிந்து வந்த குழந்தையில் உடல்

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகே கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி. இவருக்கும் தியாகராஜன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத கர்ப்பமாக இருந்த பொம்மிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் வளைகாப்பு நடத்தப்பட்டது. பிரசவத்துக்காக பொம்மி இன்று அதிகாலை கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.  காலை 6 மணி அளவில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர், பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். போதிய பயிற்சி இல்லாத செவிலியர் என்பதால் குழந்தைப் பிறப்பின்போது குழந்தையின் தலையில் இடுக்கி வைத்து எடுத்துள்ளார்.

குழந்தை வெளியே வரவில்லை என்பதால் அதிக அழுத்தம் கொடுத்து தலையை எடுத்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் தனியாக வெளியே வந்தது. ஆபத்தை உணர்ந்த அந்த செவிலியர், 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் பொம்மியைக் கொண்டு சென்றார். செங்கல்பட்டு மருத்துவமனையில் வயிற்றில் இருந்த குழந்தையின் உடலை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார்கள். தற்போது ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மி சிகிச்சை பெற்று வருகிறார்.  கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என உறவினர்கள் கூவத்தூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க