ஸ்டார்ட்அப் தொடங்க விருப்பமா?- சென்னையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு | To start startup business

வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (20/03/2019)

கடைசி தொடர்பு:13:38 (20/03/2019)

ஸ்டார்ட்அப் தொடங்க விருப்பமா?- சென்னையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் தொழிலைத் தொடங்கி சாதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இருக்கிறீர்களா? அதற்கேற்ற யோசனைகளை மனதில் தேக்கி வைத்திருக்கிறீர்களா? அடுத்து என்ன செய்வது, எப்படித் தொடங்குவது என்ற தயக்கமா? உங்களுக்கான வழிகாட்டியாக, நாணயம் விகடன் மற்றும் YNOS Venture Engine(An IIT Madras Incubated Start-up) இணைந்து `ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்' என்ற ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. 

ஸ்டார்ட் அப்

இதற்கான முதல் பயிற்சி வகுப்பு சென்னையில் 2019 மார்ச் 31 (ஞாயிற்றுக்கிழமை), அன்று நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில், நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை முழுமையாகப் புரிந்துகொள்வது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு குறித்த நுணுக்கமான விஷயங்களைப் புரிந்துகொள்வது, ஸ்டார்ட்அப்-க்கு முதலீட்டைப் பெறுவதற்கான திட்டத்தை நம்பிக்கையுடன் உருவாக்குவது, YNOS டெக்னாலஜி இணையதளம் குறித்த அறிமுகம், அதன்மூலம் ஸ்டார்ட்அப்-களுக்குக் கிடைக்கும் நன்மைகள், சலுகைக் கட்டணத்தில் YNOS டெக்னாலஜி இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்வதெனப் பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். 

பிசினஸில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பில் அவசியம் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சிக் கட்டணம் : ரூ.6,000. Early bird offer : ரூ.4,000 (மார்ச் 25 வரை)

பயிற்சியாளர்: Dr. அ.தில்லை ராஜன், 
Professor, DoMS, IIT, Chennai, Associate, Harvard University, USA, Founder, YNOS Venture Engine
மேலும் விவரங்களுக்கு, 9940415222 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.