விமர்சனத்துக்குள்ளான தமிழிசையின் ட்வீட்!- என்ன காரணம்? | Tamilisai Soundararajan who posted in the verbal error ... festering netizens

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:27 (25/03/2019)

விமர்சனத்துக்குள்ளான தமிழிசையின் ட்வீட்!- என்ன காரணம்?

 

தமிழிசை  சௌந்திர ராஜன்  பி.ஜே.பி

ரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `கீழடியில் மீண்டும் ஆய்வு தொடங்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையை விமர்சித்தார் தமிழிசை சௌந்தரராஜன். குறிப்பாக கீழடி ஆய்வு குறித்து விமர்சித்து ட்வீட் செய்தவர் அதை தவறான முறையில் வாக்கியப் பிழையில் தனதுக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், `கீழடி ஆய்வு மீண்டும் துவங்கும்....திமுக .....யார் நிறுத்தினார்கள்? மோடி அரசு தொடர்ந்து நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி' என்று பதிவிட்டிருப்பதை நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் `தற்போதாவது உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. உண்மையை உரக்கச் சொல்லுங்கள் மோடி அரசு, மோசடி அரசு என்று பலரும் கமென்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

தமிழிசை  சவுந்திர ராஜன் பி.ஜே.பி

நூற்றுக்கணக்கான கமென்ட்ஸ் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், அந்தப் பதிவு இன்னும் தமிழிசையின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து தமிழிசை சௌந்தரராஜனை அழைத்தபோது அவர் தொடர் மிட்டிங்கில் இருப்பதாக அவருடைய  உதவியாளர்கள் தெரிவித்தனர், அரசியல் களத்தில் இருக்கிற முக்கியத் தலைவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்