``விஜய் சேதுபதி கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கேன்'' - பச்சையம்மாள்! | Vijay sethupathy donates car and five laksh rupee amount to social activist pachai ammal

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (20/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (20/03/2019)

``விஜய் சேதுபதி கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கேன்'' - பச்சையம்மாள்!

``ங்கயாவது, மக்கள் கொத்தடிமையா  இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்களைக் கூட்டிட்டு வர வண்டி புடிக்க ரொம்ப சிரமப்படுவோம். அந்த நேரம் பார்த்து கையில காசும் இருக்காது. இனிமே அந்தக் கவலை இல்லை. எல்லாம் விஜய் சேதுபதி சாரால தான். இப்பக்கூட சார் கொடுத்த கார்லதான் மக்களை மீட்கப் போய்ட்டு இருக்கோம் '' உற்சாகமாகப் பேசுகிறார், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பச்சையம்மாள்.

விஜய் சேதுபதி

பழங்குடிப் பெண்ணான பச்சையம்மாள், பல வருடங்களாகக் கொத்தடிமையாக இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த 2012-ம்பச்சையம்மாள் ஆண்டு மீட்கப்பட்டவர். தான் மீண்டதைப்போல இந்த அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களையும் மீட்க வேண்டும் என ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு சங்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி களப்பணி செய்துவருகிறார். தன் அபார முயற்சியால்,  இதுவரை கொத்தடிமையாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு, ரேஷன் கார்டு வாங்கித்தருவது, ஆதார் கார்டு பெற்றுத் தருவது போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இந்த ஆண்டில், அவள் விகடன் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழகத்தின் தலைசிறந்த 10 பெண்களில் பச்சையம்மாளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பச்சையம்மாள். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியிடம், கொத்தடிமையாக இருக்கும் மக்களை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், தன் தேவைகளைப் பற்றியும் உரையாடியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று திடீரென நடிகர் விஜய் சேதுபதியிடமிருந்து ஒரு காரும், ஐந்து லட்சம் பணமும் வந்து சேர்ந்திருக்கிறது. 

கார்

மகிழ்வின் எல்லையில் இருந்த பச்சையம்மாளிடம் இதுகுறித்துப் பேசினோம்,

``டிவி நிகழ்ச்சியில பேசும்போது உன்னோட கனவு என்னம்மான்னு விஜய் சேதுபதி சார் கேட்டாரு. சொந்தமா ஒரு ஆபீஸ் கட்டணும்; அதுல எங்க துரை சார், சம்பத் சார், சின்னா சார்  மூணு பேருக்கும், சேர், டேபிள், கம்ப்யூட்டர் போடணும். அந்த கம்ப்யூட்டர்ல நாங்க மீட்டெடுத்துட்டு வர்ற மக்களப் பத்தி தகவல்களை வச்சுக்கணும். அதேபோல, கொத்தடிமையா மக்கள் எங்கயாவது இருக்காங்கன்னு கேள்விப்பட்டா, அவங்கள கூட்டிட்டு வர வாடகைக்குத்தான் கார் புடிப்போம். பெட்ரோல் போடறது, டிரைவருக்குப் பேட்டாண்ணு ரொம்ப செலவாகும். சொந்தமா ஒரு கார் இருந்தா நல்லாயிருக்கும். இது ரெண்டும்தான் சார் என் கனவுன்னு விஜய் சேதுபதி சார்கிட்ட சொன்னேன். 

கார்

நேத்து, விஜய் சேதுபதி சார் ரசிகர் மன்றத்துல இருந்து நாலஞ்சு பேர் வந்தாங்க. அவங்ககிட்ட சார் கார் கொடுத்து அனுப்பியிருக்காரு. கூட, அஞ்சு லட்சம் பணமும் கொடுத்தாங்க. சங்கத்து அக்கவுன்ட்ல பணத்த போட்டுட்டேன். ஆபீஸ் கட்டுறதுக்கான வேலைகள ஆரம்பிக்கணும்.

இனிமேல், கொத்தடிமையா மக்கள் எங்க கஷ்டப்பட்டாலும் ஈசியா மீட்டு வந்துடுவோம். இப்பகூட சார் கொடுத்த கார்லதான் மக்கள மீட்க போய்ட்டு இருக்கோம். இந்த கார்ல என் மக்களை கூட்டிட்டு வர ரொம்ப ஆசையா இருக்கு'' வெகு உற்சாகமாகப் பேசுகிறார் பச்சையம்மாள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க