`ஊருக்குத்தான் அட்வைஸ்; அவருக்கு இல்லை' - ஓ.பி.எஸ் குறித்து தினகரன் கிண்டல்! | Ttv dinakaran slams ops in Political Heir

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:23 (25/03/2019)

`ஊருக்குத்தான் அட்வைஸ்; அவருக்கு இல்லை' - ஓ.பி.எஸ் குறித்து தினகரன் கிண்டல்!

'வாரிசு அரசியல்குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்' என தஞ்சாவூரில் தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

தஞ்சாவூரில், சசிகலாவின் கணவர் நடராஜனின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `` அ.ம.மு.க வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியில், வரும் 22-ம் தேதி வெளியிடப்படும். அரசியல் கட்சியினர் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துவருகிறார்கள். ஓ.பி.எஸ், தனது மகனுக்கு சீட் கொடுத்துள்ளார். வாரிசு அரசியல்குறித்துப் பேசியவர், அவரின் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார். ஊருக்குத்தான் அட்வைஸ் அவருக்கு இல்லை. பதவிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். 

தினகரன்

அ.தி.மு.க-வின் மற்றொரு அணிதான் சசிகலா தலைமையில் இருக்கும் அ.ம.மு.க. உரிமைக்காகப் போராடும் வரை கட்சியைப் பதிவு செய்ய முடியாது. கட்சியைப் பதிவுசெய்துவிட்டால், உரிமை போய்விடும். ஆகவேதான் கட்சியைப் பதிவுசெய்யவில்லை. அத்துடன், வரும் 25-ம் தேதி, நாங்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். தோற்றுப்போகும் கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர். மாற்றம், ஏற்றம் என சொல்லிவிட்டு சேர்ந்துகொண்டது தற்போது பித்தலாட்டமாகிவிட்டது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப் பயந்த பலமான பயில்வான் கூட்டணி, இந்தத் தேர்தலில் தனித்துச் செல்ல பயந்து கூட்டணி அமைந்துள்ளனர். ஜெ-வுக்கு நினைவிடமும், சட்டசபையில் உருவப்படத்தையும் திறக்கக் கூடாது எனச் சொன்னவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? நாங்கள் மக்களையும், ஜெ-வின் தொண்டர்களையும் நம்பி இருக்கிறோம். 

தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில், ஈ.பி.எஸ் முதல் 33 அமைச்சர்களும் புறமுதுகு காட்டி ஓடியவர்கள். தற்போது, ஜெயலலிதா யாரெல்லாம் வேண்டாம் என நினைத்தார்களோ, துரோகம் செய்வதுபோல் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அதனால், அவர்களுக்கு தமிழகத்தின்மீது அக்கறை இல்லை.  அ.தி.மு.க கூட்டணி துரோகக் கூட்டணி. தி.மு.க கூட்டணி திருவாரூர் இடைத்தேர்தலில் நிற்கப் பயந்த கூட்டணி. இந்தக் கூட்டணியையும், கருத்துக் கணிப்பையும் முறியடித்து, அ.ம.மு.க அமோக வெற்றிபெறும்" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க