களைகட்டும் தேர்தல் களம் - 2014 போலவே 5 முனை போட்டி! | 2014 election root follows in 2019 election..

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:24 (25/03/2019)

களைகட்டும் தேர்தல் களம் - 2014 போலவே 5 முனை போட்டி!

தேர்தல்

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவியது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளும் பி.ஜே.பி. கூட்டணியில் சிறிய கட்சிகளும் அங்கம் வகித்தன. தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 5 முனைபோட்டி நிலவியது. அ.தி.மு.க தனி அணியாகவும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஓர் அணியாகவும், தே.மு.தி.க., பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவை ஓர்  அணியாகவும், காங்கிரஸ் ஓர் அணியாகவும், கம்யூனிஸ்ட்கள் ஓர் அணியாகவும் போட்டியிட்டன. 

அ.தி.மு.க

இப்போது நடைபெறும் 2019 தேர்தலில் 5 முனைபோட்டி ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. அ.தி.மு.க. அணியில் பா.ம.க., பி.ஜே.பி. தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகள் தவிர டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு கூட்டணி அமைத்திருக்கிறது. கமலின் மக்கள் நீதி மய்யமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. 

தி மு க

2009 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. வாக்குகளைப் பிரித்தால் 25 தொகுதிகளில் தி.மு.க. அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி தோல்வி பாதிக்கப்பட்டது. இப்போது அ.ம.மு.க. மக்கள் நீதி மய்யம் பிரிக்கப் போகும் ஓட்டுகள் அ.தி.மு.க. தி.மு.க. கூட்டணியின் வெற்றிகளை நிச்சயம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க