`இங்கிலீஷ் தெரியாதவன் பார்லிமென்ட்டுக்கு போயும் பயனில்லை!' - துரைமுருகன் | There is no use to go to Parliament without english knowledge says durai murugan

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:25 (25/03/2019)

`இங்கிலீஷ் தெரியாதவன் பார்லிமென்ட்டுக்கு போயும் பயனில்லை!' - துரைமுருகன்

‘‘இங்கிலீஷ் தெரியாதவன் பார்லிமென்ட்டுக்கு போவதும், இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருப்பதும் ஒன்றுதான். இங்கிலீஷ் அல்லது இந்தி தெரிந்தால்தான் பிரயோஜனம்’’ என்று மகனை ஆதரித்து, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

துரைமுருகன் பேசிய காட்சி.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுகக் கூட்டம், வேலூரில் இன்று நடைபெற்றது. மகனை அறிமுகப்படுத்தி துரைமுருகன் பேசுகையில், ‘‘பார்லிமென்ட்டுக்கு போனால் இங்கிலீஷ் பேசணும். தமிழக சட்டசபையில் நம் மொழியில் வெளுத்துவாங்கலாம். இங்கிலீஷ் தெரியாதவன் பார்லிமென்ட்டுக்கு போவதும், இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருப்பதும் ஒன்றுதான். இங்கிலீஷ் அல்லது இந்தி தெரிந்திருக்க வேண்டும். இதுவரையில், ஜி.விசுவநாதனுக்குப் பிறகு பார்லிமென்ட்டுக்குப் போன எம்.பி-க்களில் யாருமே பேசவில்லை. என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை. கதிர்ஆனந்த் மணிக்கணக்கில் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் மிக்கவர். 

மகன் கதிர்ஆனந்துடன் துரைமுருகன்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் ஒழுங்காக இருக்கிறேன். அதனால்தான், ஒரே தொகுதியில் 10 தடவை நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். அடுத்தமுறை தேர்தல் வந்தாலும் நான்தான் நிற்பேன். நான்தான் ஜெயிப்பேன். ஏனென்று கேட்டால், கொடுத்த வாக்குறுதிகளைக் குறையில்லாமல் செய்திருக்கிறேன். அதேபோல, என் மகனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கதிர்ஆனந்தை எம்.பி-யாக்கினால், அவர் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும். அடுத்த 24 மணி நேரத்தில், அ.தி.மு.க ஆட்சியைக் கலைப்போம். அதற்கான வேலைகளை நானே தொடங்குவேன்’’ என்றார்.