`முதல்ல துட்டு சம்பாதிங்க...' - ஜெயலலிதா அட்வைஸ் குறித்து சிலாகித்த ஜி.கே.மணி! | Jayalalithaa advised to G.K.Mani for made money ...

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:28 (25/03/2019)

`முதல்ல துட்டு சம்பாதிங்க...' - ஜெயலலிதா அட்வைஸ் குறித்து சிலாகித்த ஜி.கே.மணி!

ஜெயலலிதா

''ஜெயலலிதாவே சொன்னாங்க. மிஸ்டர் ஜி.கே.மணி, நீங்க துட்டு சம்பாதிக்கல... முதல்ல துட்டு சம்பாதியுங்க. எதிர்காலத்திற்கு என்ன செய்ய போறீங்க?'' என்று. கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்கு. அதில் விவசாயம் செய்வேன்னு சொன்னதற்கு, ''இல்ல இல்ல, நான் உங்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்போறேன்''  என்றார் என ஜி.கே.மணி பூரிப்புடன் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று, சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, ''ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர். சுயமாக முடிவெடுப்பதில் வீரமான பெண் தலைவர். அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவர் ராமதாஸ் அய்யா எனக்கு போன் பண்ணி, ''உங்களுக்கு மனசு ரொம்ப கஸ்டமா இருக்கும்'' என்றார். ஆமாம், மனசு கஸ்டமா இருக்கு. அவங்க குணமாக வேண்டுமென்றேன். திரும்பி நானும் அய்யாவிடம் உங்களுக்கு எப்படி இருக்கு என்றேன், ''எனக்கும் ரொம்ப கஸ்டமாத்தான் இருக்கு'' என்றார்.

ஜெயலலிதாவோடு அரசியல் களத்தில் பங்கேற்றவன். பா.ம.க சார்பாக நான் அவரோடு கூட்டணி பேசுவதற்காக நான் செல்லுவேன். கூட்டணி பேசுவதற்காக என்னை போயஸ்கார்டன், கொடநாடு வரச்சொல்லுவாங்க. அப்போது, ஜெயலலிதா என்னிடம், ''நீங்க நல்லா வொர்க்கவுட் பண்றீங்க. எந்தக் கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்றீங்க. வீட்டில் நல்ல ஹோம் வொர்க் பண்ணறீங்க. ஆனா, உங்க மீது எனக்கு ஒரு வருத்தம் இருக்கு'' என்றார். எனக்கு தூக்கிப்போட்டது. அம்மா என்றேன்...

மணி

''ஜெயலலிதாவே சொன்னாங்க. மிஸ்டர் ஜி.கே.மணி, நீங்க துட்டு சம்பாதிக்கல... முதல்ல துட்டு சம்பாதிங்க. எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போறீங்க?'' என்றார். கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்கு. அதில் விவசாயம் செய்வேன்னு சொன்னதற்கு, ''இல்ல இல்ல, நான் உங்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்போறேன் என்றார்" என சிலாகித்துக் கூறினார்.

இப்படி ஜி.கே.மணி மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலையும் காதைக் கடித்துக்கொண்டு ஜி.கே.மணியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.