வனவிலங்குகளுக்கு நாேய் பரவுவதைத் தடுக்கும் முயற்சி - முதுமலையில் காேமாரி தடுப்பூசி முகாம்! | Vaccination camp in villages near mudhumalai tiger reserve

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (20/03/2019)

வனவிலங்குகளுக்கு நாேய் பரவுவதைத் தடுக்கும் முயற்சி - முதுமலையில் காேமாரி தடுப்பூசி முகாம்!

வன விலங்குகள் நிறைந்த 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காெண்ட முதுமலைப் புலிகள் காப்பகச் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொக்காபுரம், தொட்டலிங்கி, ஆச்சக்கரை ,சொக்கநல்லி, மயார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். வன விலங்குகள் நிறைந்த இப்பகுதியில் கால்நடை மேய்ச்சல் இருப்பதால் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகள் மூலம் பல்வேறு நோய்கள் வன விலங்குகளுக்குப் பரவும் அபாயம் உள்ளது. 

தடுப்பூசி முகாம்

எனவே, வன விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்நிலையில் இங்கு நியோ தடுப்புச் சிறப்பு முகாம் நடந்தது. இது குறித்து மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் கூறுகையில், ``முதுமலை வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை உள்ளது. வனப் பகுதியையொட்டிய கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு வனத்துறை சார்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறைகள் கோமாரி தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பு முகாமில் சுமார் 3000க்கும் அதிகமான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. கால்நடைகளுக்குப் பரவும் நோய்கள் குறித்து பாெதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது" என்றார். 

ராமமூர்த்தி

இது குறித்து காட்டுயிர் ஆர்வலர் ராமமூர்த்தி கூறுகையில், ``நாம் தற்போது அழிந்துவரும் வன விலங்குகளைப் பாதுகாக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். வளமான நாட்டிற்கு 33% காடுகள் தேவை நம்மிடம் 17% காடுகள் மட்டுமே உள்ளது. மேலும் வன விலங்குகளுக்குப் பெரிதாக எந்த நோய்த் தொற்றும் ஏற்படுவதில்லை. ஆனால், மனித தவறுகளால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நாம் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. நோய் பாதித்த ஆடு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்ட அல்லது தண்ணீர் பருகிய இடங்களில் வன விலங்குகளும் மேய்ச்சலில் ஈடுபடும்பாேது, நீர் பருகினால் மான், காட்டு மாடு போன்ற வன விலங்குகளுக்கு நாேய் பரவி பின்பு மொத்தக் காடுமே பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும். இத்தனைக்கும் புலிகள் காப்பக விதிகளில் கால்நடை மேய்ச்சலுக்குத் தடைகள் உள்ளது. எனவே, இதைச் சார்ந்து உள்ள விவசாயிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அடர் வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை விதிக்க வேண்டும். அப்படிச் செய்தாலே இது போன்ற நோய்கள் ஒருபோதும் வன விலங்குகளைத் தாக்காது’’ என்றார்.