`தமிழகத் தலைநகரம் சென்னை; தி.மு.க-வின் தலைநகரம் திருவாரூர்' - பேச்சால் மக்களை ஈர்த்த ஸ்டாலின்! | Stalin heart touch speech in Thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:29 (25/03/2019)

`தமிழகத் தலைநகரம் சென்னை; தி.மு.க-வின் தலைநகரம் திருவாரூர்' - பேச்சால் மக்களை ஈர்த்த ஸ்டாலின்!

ஸ்டாலின்

திருவாரூரில் இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அதன் தொடர்ச்சியாக, பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஸ்டாலின், இப்பகுதி மக்களின் மனதைத் தொடும் வகையில் டச்சிங்காகப் பேசி அசத்தினார்.

ஸ்டாலின்

‘’இந்தியாவின் தலைநகரம் டெல்லி, தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைநகரம் திருவாரூர். தலைவர் கருணாநிதியை ஈன்ற ஊர் இது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தாலில் இங்கு போட்டியிட்ட கருணாநிதியை வெற்றிபெறச் செய்தீர்கள். 2016-ம் ஆண்டு தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தான். உங்களது அன்பினால்தான் அதிக வாக்குகள் பெற்றார். நான் ஏன் இங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினேன் தெரியுமா?.

ஸ்டாலின்

திருவாரூர் மக்களின் அன்பைப் பெற்றால்தான், தலைவர் கருணாநிதியின் வாழ்த்துகளை நான் பெற முடியும். இதனால்தான், இங்கிருந்து பிரச்சாரத்தைத் துவக்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி முடிவடையும் நாள் ஜூன் 3-ம் தேதி. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளும் ஜூன்-3 ம் தேதிதான். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்” என்று சொன்னதும், கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி ஆரவாரம்செய்தார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க