பழனி பங்குனி உத்திர திருவிழா - குவிந்த பக்தர்கள் | Palani uthram function going on

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (21/03/2019)

பழனி பங்குனி உத்திர திருவிழா - குவிந்த பக்தர்கள்

பழனியில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15-ம் தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது உத்திர விழா. தங்க மயில், வெள்ளி யானை. ஆட்டுக் கிடா வாகனங்களில் சுவாமி தினமும் திரு உலா வருகிறார். கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் விழா, மார்ச் 24 -ம் தேதி நிறைவடைகிறது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.   

பழநி திருக்கல்யாணம்

 திரு ஆவினன்குடி கோயிலில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் தண்டாயுதபாணி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பங்குனி உத்திர நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை தேரோட்டம் நடைபெறும். 

கொங்கு மண்டலத்தில் உள்ள பக்தர்கள் அதிகம் பங்கேற்கும் திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா இருக்கிறது. இதற்காகக் கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க