`கழகத்துக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார்’ - அ.ம.மு.க-விலிருந்து வி.பி.கலைராஜன் அதிரடி நீக்கம்! | VP Kalairajan removed from ammk

வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (25/03/2019)

`கழகத்துக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார்’ - அ.ம.மு.க-விலிருந்து வி.பி.கலைராஜன் அதிரடி நீக்கம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து வி.பி.கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

அ.தி.மு.க-வில் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் வி.பி.கலைராஜன். ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சி இரண்டாகப் பிரிந்தபோது தினகரன் அணியில் ஐக்கியமானார் இவர். இந்நிலையில் இன்று மாலை வி.பி.கலைராஜனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கலைராஜன்

அதில், ``கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் கலைராஜன் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார். தினகரனின் வலது கைபோல் செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜி, தி.மு.க-வுக்குச் சென்றது அ.ம.மு.க-வின் பெரும் பின்னடைவாகப் பேசப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த நீக்கம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க