``மாங்கனிக்குப் பதிலாகத் தாமரைக்கு வாக்குக் கேட்ட பா.ஜ.க நிர்வாகி” - அமைச்சர் அப்செட் | ADMK Starts Lok sabha Election Campaign in Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (25/03/2019)

``மாங்கனிக்குப் பதிலாகத் தாமரைக்கு வாக்குக் கேட்ட பா.ஜ.க நிர்வாகி” - அமைச்சர் அப்செட்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியின் பிரசாரம் நேற்று தொடங்கியது. இந்தத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஜோதிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வேட்பாளர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரத்தைத் தொடங்கினார். திண்டுக்கல்லில் முதல் பிரசாரத்தைத் தொடங்கினார்கள். வாக்குக் கேட்கும்போது, பா.ஜ.க நிர்வாகி, சின்னத்தை மாற்றி தாமரை சின்னத்தில் ஓட்டுக்கேட்டார். இதனால் டென்சனான அமைச்சர் சீனிவாசன், பா.ஜ.க தலைவரை வசைபாடினார். 

 திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் திருநகரில் அ.தி.மு.க அணியின் சார்பாக பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரும் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான பி.ஜி.போஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துக்கு ஆதரவாகக் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வாக்குக் கேட்டனர்.

பா.ஜ.க நிர்வாகி போஸ் வாக்கு சேகரிக்கும்போது மாங்கனிக்குப் பதிலாக தாமரைச் சின்னத்தில் ஓட்டளியுங்கள் என்று வாக்குக் கேட்டார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த கூட்டணிக் கட்சியினரும் தொண்டர்களும் 'சின்னத்தை மாற்றிக் கூறுகிறீர்கள். உங்கள் சின்னத்தை விட்டுவிட்டு, மாங்கனிக்கு வாக்குக் கேளுங்கள்' என்று கூறினார்கள். இதனால் டென்ஷனான வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பா.ஜ.க நிர்வாகி என்றும் பாராமல் அவருக்கு நேராக கை நீட்டி வசை பாடினார். இதைப் பார்த்தும் கூட்டத்தினர் சிரிக்கத் தொடங்கினர். முதல் பிரசாரத்திலேயே மாங்கனிக்குப் பதிலாக தாமரைக்கு வாக்குக் கேட்டது கூட்டணி கட்சியினரிடம் பரபரப்பு பேச்சாக இருந்தது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க