``தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சித்தது கிடையாது!” - ஹெச்.ராஜா | I personally did not criticise anyone says H. Raja

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (25/03/2019)

``தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சித்தது கிடையாது!” - ஹெச்.ராஜா

அ.தி.மு.க-வை நான் ஒருபோதும் விமர்சித்தது இல்லை என்று சிவகங்கையில் ஹெச்.ராஜா பேசியது அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

ஆ.ராசா

சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, `பி.ஜே.பி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும். நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார். அவருக்குத் துணையாக நானும் அமைச்சரும் இருப்போம்’ என்று உறுதியளித்தார். 

சிவகங்கை பி.ஜே.பி வேட்பாளராகக் கட்சி அறிவிப்பதற்கு முன்பே தன்னை வேட்பாளராகப் பிரகடனம் செய்துகொண்ட ராஜா பேசும்போது, ``அத்வானி காலத்திலிருந்தே பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு நேச்சுரல் கூட்டணி வைத்திருக்கிறது. ஏதாவது, பிரச்னைகளுக்காக மட்டுமே அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க-வினர் யாரையும் நான் ஒருபோதும் விமர்சனம் செய்து பேசியது கிடையாது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது. பிரதமர் மோடி இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராவார். காவேரி குண்டாறு இணைப்புத் திட்டம் நான் எம்.பி-யானவுடன் அதற்கு முயற்சி எடுப்பேன்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க