“இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மோடி ஜி!” - மதுரைக் கூட்டத்தில் செல்லூர் ராஜு அதகளம் | TN Minister Sellur Raju Praises PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (25/03/2019)

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மோடி ஜி!” - மதுரைக் கூட்டத்தில் செல்லூர் ராஜு அதகளம்

பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாவலர். அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்போல விளங்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ

மதுரை பாராளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்யனை  அறிமுகப்படுத்தினார். செல்லூர் ராஜு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து அழும் குரலுடன் பேச ஆரம்பித்தார், ``ஜெயலலிதா இல்லாத சூழலில் தேர்தலில் களம் காண்கிறோம். எனவே, சம்மட்டி அடி கொடுக்கும் அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். மதுரை வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கு திறமை உள்ளது கண்டிப்பாக வெற்றிபெருவார். கூட்டணி இல்லாதபோதே அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மெகா கூட்டணி அமைத்துள்ளோம் கண்டிபாக வெற்றி பெறுவோம்.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார்போல் மோடி ஜி விளங்குகிறார். அவர் அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்துவந்தார். கடந்த ஜனவரிக்கு முன்பு வரை தி.மு.க-தான் வெற்றிபெறும் என ஊடங்கள் சொல்லிவந்தன. தற்போது பொங்கலுக்கு 1000 ரூபாய் மக்களுக்கு வழங்கியதன் காரணமாக அ.தி.மு.க-தான் வெற்றிபெறும் என ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. எனவே, அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றிபெறும். எழுத்தாளர் சு.வெங்கடேஷன் நல்ல எழுத்தாளர். அவர் அரசியலுக்கு வரத் தேவையில்லை. அவரை மீண்டும் எழுதுவதற்கே அனுப்பலாம்’’ என தெரிவித்தார்.