பானைச் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவன்! | Election commission allotted pot symbol to VCK

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:33 (25/03/2019)

பானைச் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவன்!

மிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி உடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்தக் கூட்டணியில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருமாவளவன்

கடந்த மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலிலும் மோதிரம் சின்னம் கேட்டுத் தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்திருந்தார். ஏற்கெனவே வேறொருவருக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதால் வி.சி.க-வுக்கு மோதிரம் சின்னத்தை வழங்க மறுப்பு தெரிவித்தனர். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பேசும் போதுகூட, “ நாங்கள் மோதிரம் சின்னத்தை ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவர்கள் மறுத்துவிட்டனர். இப்போது வேறொரு சின்னத்தைக் கேட்டிருக்கிறோம். ஏனோ தெரியவில்லை தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்குவதில் காலம் தாழ்த்துகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பானைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.