சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் திடீர் மரணம் | Coimbatore Sulur Admk Mla Kanagaraj passed away

வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:38 (25/03/2019)

சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்

கோவை சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் இன்று காலை மரணமடைந்தார்.

கனகராஜ்

கோவை சூலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கனகராஜ் (64). கடந்த 35 ஆண்டுகள் அ.தி.மு.க-வில் இருந்திருக்கிறார். சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் கனகராஜ் இருந்துள்ளார். அவ்வப்போது தனது கருத்துகளால் பரபரப்பைக் கிளப்பும் கனகராஜ், கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட தே.மு.தி.க-வுக்கு ஆயிரம் வாக்குகளும், ம.தி.மு.க-வுக்கு ஐந்நூறு வாக்குகளும்தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது இல்லத்தில் இன்று காலை 7.30 மணி அளவில் நாளிதழ் படித்துக்கொண்டிருந்த கனகராஜ், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர்.

கனகராஜ்

கனகராஜ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.