தமிழகத்தில் தனித் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசிப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்! | Pon RadhaKrishnan speaks about Lok sabha election 2019 manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:39 (25/03/2019)

தமிழகத்தில் தனித் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசிப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்!

பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் தனித் தேர்தல் அறிக்கை வெளியிடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Pon.Rathakrishnan


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரியில் அமைய உள்ள துறைமுகத்தின் நன்மைகள் பற்றி கன்னியாகுமரி, கோவளம், கீழ மணக்குடி மீனவ சமுதாய மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. துறைமுகத்தால் மீனவர்களுக்கு என்ன லாபம் எப்படிப்பட்ட தொழில்களை நடத்த முடியும் என்பதுபற்றியும், மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விளக்கினேன். எல்லோரும் இணைந்து கரம் கோத்து புதிய இந்தியாவை ஏற்படுத்துவோம்.

பொன் ராதாகிருஷ்ணன்

 

பா.ஜ.க. குறைந்த பட்சம் 300 இடங்களை தாண்டி வெற்றிபெறும். பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் தனித் தேர்தல் அறிக்கை வெளியிடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்படும். தேர்தல் அறிக்கை என்பது அந்தக் கட்சிகளின் நிலைப்பாடு. தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் நிறைவேற்ற வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலில் மக்கள் மனதை தயார் படுதிக்கொள்ள வேண்டும். தயவுசெய்து ஓட்டுக்காக யாரும் பணம் வாங்காதீர்கள். நான் வெற்றிபெற்றபோது ஒரு நயா பைசா கொடுக்கவில்லை. எனவே, நாற்பதாயிரம் கோடி ரூபாய் நிதியில் வளர்ச்சிப்பணி செய்துள்ளேன். தேர்தலின்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாம இருக்க தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்" என்றார்.